பதவி விலகுகிறாரா? கனடா பிரதமர்...! (முழு விபரம்)



கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

கட்சியின் அடுத்த தலைவர் தேர்வு செய்யப்படும் வரை தற்காலிக பிரதமராக தொடர்வதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

ட்ரூடோ பதவி விலக வேண்டும் என்று அவரது சொந்த கட்சியான லிபரல் கட்சி உறுப்பினர்களும் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.

இவர் மீண்டும் கனடா தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல், ட்ரூடோவை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கி விட்டு, வேறு ஒருவரை நியமிப்பது குறித்தும் ஆலோசித்து வருகின்றனர்.

மேலும்,ட்ரூடோவின் அரசுக்கு ஆதரவு கொடுத்து வந்த என்.டி.பி., கட்சியும் ஆதரவை விலக்கி கொண்டது. மேலும், அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதேவேளை அமெரிக்க நிர்வாகத்துடனான உறவுகள் உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச பிரச்சினைகளை அவர் கையாள்வதை சுட்டிக்காட்டி, அவர் வெளியேற வேண்டும் என்ற நெருக்கடி ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post