யாழ் மக்கள் அச்சம் தேவையில்லை...!



யாழ் மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என யாழ்ப்பாண யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் அச்சமின்றி செயற்படவும் சட்டம் ஒழுங்கை நிறைவேற்றவும் பொலிஸார் தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த வாரத்தில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு முறையான தண்டணை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post