நாட்டில் குழந்தை பிறப்பு வீதத்தில் வீழ்ச்சி...!!



நாட்டில் 11 வருடங்களின் பின்னர் குழந்தை பிறப்பு வீதம் குறைவடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2013ஆம் ஆண்டு 352,450 குழந்தைகள் பிறந்ததாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனோஜா செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த எண்ணிக்கை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 228,091 ஆக குறைவடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

நாட்டில் வருடாந்த குழந்தை பிறப்பு வீதம் சுமார் ஒரு இலட்சத்தால் குறைவடைந்துள்ளதாக வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது தொடர்பில் மக்களிடையே தௌிவூட்டல் வழங்கப்பட வேண்டுமென விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post