IMF ஒப்பந்தத்தை மீள்பரிசீலனை செய்ய அரசாங்கம் திட்டம்...!



IMF இலங்கை செய்துள்ள உடன்படிக்கையை மீள்பரிசீலனை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நிதி பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும இன்று (21) நாடாளுமன்றில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

இதன் மூலம், பொதுமக்களின் நிதிச்சுமையை குறைக்கும் நோக்கில் கூடுதல் நிவாரண நடவடிக்கைகளை அமுல்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சித்ரால் பெர்னாண்டோ எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெளிவுபடுத்தினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் குடிமக்களுக்கு கணிசமான சிரமங்களை ஏற்படுத்தியுள்ளன என்பதை ஒப்புக்கொண்ட அமைச்சர், இந்த சவால்களைத் தணிக்க வடிவமைக்கப்பட்ட பல முயற்சிகளை அரசாங்கம் கோடிட்டுக் காட்டியுள்ளதாக கூறினார்.

வருமானத்திற்கு செலுத்தப்படும் வரியை 150,000 ரூபாவாக அதிகரிப்பது, குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவைகளை நிவர்த்தி செய்ய பால் பொருட்கள் மீதான பெறுமதி சேர் வரி (VAT) விலக்கு, பாடசாலை உபகரணங்களை வாங்குவதற்கு மாணவர்களுக்கான 6,000 ரூபாய் கொடுப்பனவு ஆகியவையும் இதில் அடங்கும்.

Post a Comment

Previous Post Next Post