ஜனவரி மாதத்தில் 5,000 டெங்கு நோயாளர்கள்...!

 


இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதிக்குள் நாட்டில் சுமார் 5,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த மாதத்தில் இரண்டு டெங்கு இறப்புகளும் பதிவாகியுள்ளதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனவரி மாத இறுதிக்குள் டெங்கு அதிக ஆபத்துள்ள 16 மண்டலங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜனவரி மாதத்தில் 4,943 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், இதில் அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர், அதன் எண்ணிக்கை 764 ஆகும்.

மேலும், கொழும்பு மாவட்டத்தில் இருந்து 674 நோயாளர்களும், கொழும்பு மாநகர சபை பகுதியில் இருந்து 608 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

காலி மாவட்டத்தில் இருந்து 315 நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் இருந்து 303 நோயாளர்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 278 நோயாளர்களும், யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து 201 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post