உள்ளூர் சந்தையில் தேவையற்ற தேங்காய் விலை உயர்வை தடுக்கும் வகையில் பல தேங்காய் உற்பத்திகளை இறக்குமதி செய்வதற்கு அங்கீகாரம் வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரம் இந்த வாரம் சமர்ப்பிக்கப்படும் என தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சாந்த ரணதுங்க தெரிவித்தார்.
தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி, இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை இலங்கையில் 200 மில்லியன் தேங்காய்கள் பற்றாக்குறையாக இருப்பதாக அவர் மேலும் கூறினார்.
மேலும், ரணதுங்க, தற்போதைய தேங்காயின் விலை உயர்வுக்குக் சீசன் காலத்தில் தேங்காய் அறுவடையில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாகும் எனத் தெரிவித்தார்.
தேங்காய் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்காக பல உள்ளுர் கைத்தொழில்களுக்குத் தேவையான அத்தியாவசிய மூலப்பொருட்களான தேங்காய்ப்பால், தேங்காய் மாவு மற்றும் உறைந்த தேங்காய் துருவல் ஆகியவற்றின் இறக்குமதியை அங்கீகரிப்பதற்காக அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
மேலும், "இந்த இறக்குமதிகள் மூலம் உள்ளூர் சந்தையில் தேங்காயின் விலை உயர்வை தடுக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று அவர் கூறினார்.
Post a Comment