புற்றுநோயாளர்கள் அதிகரிப்பு...!

 


நாட்டில் ஒவ்வொரு நாளும் மூன்று முதல் நான்கு பேர் வாய்வழிப் புற்றுநோயால் உயிரிழப்பதாக விசேட வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஆண்டுதோறும் 2,000 முதல் 3,000 வரை புதிய வாய்வழி புற்றுநோய்கள் கண்டறியப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே விசேட வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், பாடசாலை மாணவர்களிடையே முன் வாய்வழிப் புற்றுநோய்க்கான அறிகுறிகளும் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post