வயோதிப பெண் கொலை – மூவர் கைது…!



கடந்த நவம்பர் மாதம் 05 ஆம் திகதி 70 வயதுடைய வயோதிப பெண் ஒருவரை கொலைச் செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நேற்று (27) தலாத்துஓய பகுதியில் மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர் .

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தலாத்துஓய, உடுதெனிய பகுதியில் உள்ள வீட்டிற்குள் புகுந்து பெண் ஒருவரின் கழுத்தை நெரித்து கொலை செய்து , வீட்டிலிருந்து சொத்துக்கள் மற்றும் தங்க நகைகளை கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையின் போதே இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைதான சந்தேக நபர்கள் 34, 36 மற்றும் 41 வயதுடையவர்கள் என்றும், மடவல மற்றும் அக்குரணை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன்போது ​​கொள்ளையிடப்பட்ட தங்கப் பொருட்களில் சில உக்குவெலவில் உள்ள தங்கம் வாங்கும் இடத்திற்கு விற்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post