பாடகர் யேசுதாஸ் வைத்தியசாலையில் அனுமதி...!



பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸ் உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு அவரது மகன் விஜய் யேசுதாஸ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

பாடகர் யேசுதாஸுக்கு நேற்று (26) இரவு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருதாக இந்திய ஊடகங்களில் தகவல் வெளியாகின.

இந்நிலையில், யேசுதாஸ் உடல்நிலை குறித்து வெளியான தகவலுக்கு அவரது மகன் விஜய் யேசுதாஸ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

தனது தந்தை யேசுதாஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை எனவும் தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் அமெரிக்காவில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post