உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறிய ஆர்ஜென்டீனா...!

 


உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து அமெரிக்காவை தொடர்ந்து ஆர்ஜென்டீனாவும் விலகுவதாக அறிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்புக்கு 8.75 மில்லியன் டொலர் நிதியை ஆர்ஜென்டீனா வழங்கி வந்தது. இது உலக சுகாதார நிறுவனத்துக்கு கிடைக்கும் நிதியில் 0.11 சதவிகிதமாகும்.

கொரோனா பெருந்தொற்று உட்பட சர்வதேச அளவில் எழுந்த பல சுகாதாரப் பிரச்னைகள் உலக சுகாதார நிறுவனத்தால் சரியாகக் கையாளப்படவில்லை என்ற முக்கிய குற்றச்சாட்டை முன்வைத்த ட்ரம்ப், உலக சுகாதார நிறுவனம் சுதந்திரமாகச் செயல்படத் தவறிவிட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், 32.5 கோடி மக்கள்தொகை உள்ள அமெரிக்கா, உலக சுகாதார அமைப்புக்கு 325 மில்லியன் டொலா் வழங்குகிறது. அதே நேரத்தில் 140 கோடி மக்கள்தொகை கொண்ட சீனா 39 மில்லியன் டொலா் மட்டுமே நிதி வழங்குகிறது என்று விமா்சித்து அந்த அமைப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இந்த நிலையில், உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து விலகும் முடிவை ஆர்ஜென்டீனா ஜனாதிபதி ஜேவியர் மிலே எடுத்துள்ளதாக அவரின் செய்தித் தொடர்பாளர் நேற்று (05) அறிவித்தார்.

ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் மானுவல் அடோர்னி செய்தியாளர்களுடன் பேசியதாவது:

“தொற்றுநோய் காலத்தில் சுகாதார முகாமைத்துவத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நமது நாட்டின் இறையாண்மையில் ஒரு சர்வதேச அமைப்பு தலையிட அனுமதிக்க முடியாது” எனத் தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post