இலங்கை அணி அறிவிப்பு///!



Asians Legends லீக் தொடருக்கான இலங்கை அணி குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய முன்னாள் பிரதம தேர்வாளர் சேத்தன் ஷர்மாவினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு புதிய கிரிக்கட் லீக் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 10ம் திகதி ராஜஸ்தானின் நாத்வாராவில் இடம்பெறவுள்ளது.

ஐந்து அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் the Asian Legends League T20 என அழைக்கப்படுகிறது. மார்ச் மாதம் 18ம் திகதி வரை போட்டிகள் இடம்பெறும்.

ஆசிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்திய கிரிக்கட் உலகின் முன்னாள் ஜாம்பவான்கள் பலர் இந்த தொடரில் பங்கேற்கவுள்ளனர். இந்நிலையில் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணிக்கு திசர பெரேரா தலைமைதாங்கவுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post