பிலிப்பைன்ஸ் துணை ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்ய தீர்மானம்...!

 


பிலிப்பைன்ஸ் துணை ஜனாதிபதி சாரா டுடெர்ட்டே மீது பிரதிநிதிகள் சபையில் பதவி நீக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 


300க்கும் மேற்பட்ட உறுப்பினர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பதவி நீக்க தீர்மானத்தை ஆதரித்துள்ளனர்.


முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்ட்டேவின் மகள் டுடெர்ட்டே, கல்விச் செயலாளராக இருந்த காலத்தில் மில்லியன் கணக்கான டொலர் இரகசிய நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 



அதுமட்டுமில்லாது, ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியரை மிரட்டியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post