சுமார் இரண்டு கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று (24) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரின் வசம் இருந்து கஞ்சா கலந்த 01 கிலோ 908 கிராம் குஷ் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்திய பிரஜையான 73 வயதான சந்தேகநபர், பேங்கொக்கிலிருந்து விமானம் மூலம் இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் குஷ் போதைப்பொருளை ஒரு சிறிய பையில் சூட்சுமமாக பொதி செய்து இனிப்புப் பொட்டலங்களுக்கு இடையில் மறைத்து வைத்து கொண்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் விமான நிலைய பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
Post a Comment