அதிக சுற்றுலாப்பயணிகள் வருகை...!


 

கடந்த ஜனவரி மாதத்தில் 252,761 சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

2018ஆம் ஆண்டுக்கு பின்னர் மாதமொன்றில் இலங்கைக்கு வருகை தந்த அதிகூடிய சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை இதுவாகும் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

2018 ஜனவரி மாதத்தில் 238,924 சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகைதந்துள்ளனர்.

இந்த வருடத்தில் பெரும்பாலான சுற்றுலாப்பயணிகள் இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ளதுடன் அதன் எண்ணிக்கை 43,375 ஆகும்.

அதனைத் தொடர்ந்து ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளிலிருந்தும் பெரும்பாலான சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post