இந்த வருடம் தேயிலையை தோட்டங்களை மேம்படுத்துவதற்காக அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.
அதன்படி, சிறு தேயிலைத் தோட்டங்களுக்கான பயிர்செய்கையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முதற்கட்டமாக 34.5 மில்லியன் ரூபாவும், இரண்டாம் கட்டமாக 17.5 மில்லியன் ரூபாவும் நிவாரணமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிய நிலங்களில் புதிய பயிர்களை பயிரிடுவதற்கான திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த பயிர்செய்கைக்காக 27.42 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
Post a Comment