சுற்றுலாத்துறையை மேம்படுத்துதல்...!



மாலைத்தீவு வெளிவிவகார அமைச்சர் கலாநிதி அப்துல்லா கலீல் இற்கும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

பாராளுமன்ற வளாகத்தில் குறித்த சந்திப்பு நேற்று இடம்பெற்றதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மாலைத்தீவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், இரு நாடுகளினதும் இராஜதந்திர நடவடிக்கைகளில் தொடர்ந்து செல்வாக்கு செலுத்தும் நீண்ட கால உறவுகள் மற்றும் பரஸ்பர நலன்கள் குறித்து இச்சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டது.

நாட்டின் பொருளாதாரத்தின் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் குறித்து பாராட்டிய மாலைத்தீவு அமைச்சர், திட்டங்களுக்கு ஏற்ப செயற்படும் திறன் குறித்து நம்பிக்கை தெரிவித்தார்.

இரு நாடுகளினதும் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறையின் முக்கிய பங்கு குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், இரு நாடுகளுக்கு இடையே சுற்றுலாவை மேம்படுத்துவதில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post