மத்தள விமான நிலையம் குறித்து..!



மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை விமான பழுதுபார்க்கும் மையமாக மாற்ற அரசாங்கம் நம்புவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (07) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தின் போது பேசிய அமைச்சர், பொருத்தமான வெளிநாட்டு பங்குதாரருடம் இணைந்து மத்தள விமான நிலையத்தை இலாபகரமான வணிகமாக மாற்ற அரசாங்கம் நம்புவதாகக் கூறினார்.

“மத்தல விமான நிலையம் ரூ. 36.5 பில்லியன் செலவில் கட்டப்பட்டது என்றும், கடந்த ஐந்து ஆண்டுகளில் மொத்த இழப்பு ரூ. 38.5 பில்லியன்” என்றும் அமைச்சர் கூறினார்.

இந்த நிறுவனத்தை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post