Health Update"சிக்குன்குனியா நோய் பரவல் எச்சரிக்கை...!



கடந்த சில வருடங்களின் பின்னர் கொழும்பு மற்றும் கோட்டை பகுதிகளில் சிக்குன்குனியா நோய் பரவல் அதிகமாக பதிவாகி வருவதாக சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

நுளம்புகள் பெருகும் இடங்களை முடிந்தவரை அழிப்பதன் மூலம் மட்டுமே சிக்குன்குனியா பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

“சிக்குன்குனியா” நோய் தற்போது ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியக் கண்டங்களிலும் பசுபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் தீவுகளிலும் பரவும் நோயாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

சிக்குன்குனியா வைரஸால் பாதிக்கப்பட்ட நுளம்பு கடித்தால் மனிதர்களுக்கும், பாதிக்கப்பட்ட பயணிகளிடமிருந்து பாதிக்கப்படாத பகுதிகளுக்கும் பரவுகிறது.

இலங்கையில் மீண்டும் சிகன்குனியா பரவும் சூழல் ஏற்பட்டுள்ளதாக சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

தற்சமயம் தொடரும் மழையுடனான வானிலையால், நுளம்புகள் பெரும் இடங்களை அழித்து, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்மாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post