Update: அனுராதபுரம் மருத்துவர் பாலியல் வன்கொடுமை: சந்தேக நபரின் சகோதரி மற்றும் மற்றொரு...



அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சந்தேக நபரின் சகோதரி மற்றும் மற்றொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

37 வயதுடைய பெண் மற்றும் 27 வயதுடைய ஆண் ஆகிய இரு சந்தேக நபர்களும் செவ்வாய்க்கிழமை (12) இரவு கல்னேவ நிதிகும்பயாய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

பொலிஸாரின் கூற்றுப்படி, அனுராதபுரம் மருத்துவமனை பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தலைமறைவாக இருப்பதற்கு உதவிய காரணத்திற்காக குறித்த பெண் கைது செய்யப்பட்டார் . அதே நேரத்தில் சந்தேக நபரால் திருடப்பட்டதாகக் கூறப்படும் மொபைல் போன் மற்ற நபரிடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post