அமெரிக்க வரியின் தாக்கம்; கட்சித் தலைவர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு…!



அமெரிக்காவின் புதிய இறக்குமதி வரிக் கொள்கை இலங்கைக்கு எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஆரம்பமாகியுள்ளது.

இன்று (10) காலை 11.00 மணியளவில் ஜனாதிபதி அலுவலகத்தில் இதற்கான கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அமெரிக்காவின் புதிய இறக்குமதி வரிக் கொள்கை தொடர்பாக, இலங்கை அரசாங்கம் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து இதன் போது தெளிவுபடுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post