IPL Updat: மும்பை – ஹைதராபாத் இன்று மோதல்...!



2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இன்று (17) நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (MI) அணியானது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியை எதிர்கொள்ளவுள்ளது.

நடப்பு சீசனின் 33 ஆவது போட்டியான இந்த ஆட்டம் இன்றிரவு 07.30 மணிக்கு மும்பை, வான்கடே மைதானத்தில் ஆரம்பமாகும்.

ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் 7 ஆவது இடத்தில் உள்ளது.

இதுவரை 6 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது.

அதேநேரம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 போட்டிகளில் 2 வெற்றிகளைப் பெற்றுள்ளது.

ஆனால், குறைந்த நிகர ஓட்ட விகிதம் (NRR) மூலம், பேட் கம்மின்ஸ் தலைமையிலான அணி, பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளனர்.

மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகள் இதுவரை 23 ஐ.பி.எல். போட்டிகளில் மோதியுள்ளன.

மும்பை அணி 13 வெற்றிகளுடன் முன்னிலை வகிக்கிறது, சன்ரைசர்ஸ் அணி 10 வெற்றிகளைப் பெற்றுள்ளது.

2024 ஐபிஎல் போட்டியில், இந்த இரு அணிகளும் இரண்டு முறை நேருக்கு நேர் மோதின.

கடந்த ஆண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்த ஹைதராபாத், ஒரு போட்டியில் மும்பை அணியை 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

மற்றொரு போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றது.

அவர்கள் 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றனர்.

Post a Comment

Previous Post Next Post