Update: அமெரிக்காவில் விமான விபத்து : இந்திய வம்சாவளிப் பெண் வைத்தியர் உட்பட...



அமெரிக்காவில் இடம்பெற்ற விமான விபத்தில் இந்திய வம்சாவளிப் பெண் வைத்தியர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் சேவையாற்றிவந்த மகளிருக்கான சிறுநீரக மருத்துவ நிபுணர், நரம்பியல் நிபுணரான அவரது கணவர், அவரது மகள் மற்றும் மகன் ஆகியோருடன் அவரது நண்பர்கள் இருவர் என 6 பேர் பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றுக்கு நியூயோர்க்கின் கேட்ஸ்கில்ஸ் மலைப்பகுதிக்கு தனி விமானத்தில் சென்றுள்ளனர்.

கடந்த 12ஆம் திகதி மருத்துவரின் கணவரால் செலுத்தப்பட்ட இந்த விமானம் கொலம்பியா கவுன்டி விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த நிலையில், 16 கிலோமீற்றர் தொலைவுக்கு அப்பால் உள்ள கோபகே என்ற பகுதியில் தரையில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

விமானத்தில் பயணித்த 6 பேரும் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

இதேவேளை, பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு செல்லாத காரணத்தால் மருத்துவரின் மற்றுமொரு மகள் விபத்தில் சிக்காமல் உயிர் தப்பியுள்ளார்.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட பெண் மருத்துவர் தனது பெற்றோருடன் சிறு வயதிலேயே அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்து, அங்கு பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் மருத்துவ பட்டம் பெற்றவர் என்றும் அவர் பொஸ்டனில் பொஸ்டன் பெல்விக் ஹெல்த் மற்றும் வெல்னஸ் நிலையத்தை நிறுவினார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post