மாகாண மட்டத்தில் அதிபர், ஆசிரியர் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை...!



மாகாண மட்டத்தில் ஆசிரியர்,அதிபர்கள் பிரச்சினைகளைத் தீர்க்கத் தேவையான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என பிரதமரும் கல்வியமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.


இதற்காக வெளியிடப்பட வேண்டிய சுற்றறிக்கைகள் மற்றும் சட்ட திருத்தங்களை அமைச்சு மூலம் மேற்கொள்ளத் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய கல்வி சீர்திருத்த நடவடிக்கைகளின் போது மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதற்காக ஆசிரியர், அதிபர் இடமாற்றங்கள் சரியான முறையில் நடைபெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வேலைத்திட்டங்களில் மாகாண மற்றும் மத்திய அரசுக்கிடையில் முறையான ஒருங்கிணைப்பு அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பாக மாகாண, வலய மற்றும் கோட்ட மட்ட கல்வி மற்றும் நிர்வாக அதிகாரிகளை தெளிவுபடுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட தெளிவூட்டல் கலந்துரையாடலிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், புதிய கல்வி சீர்திருத்தத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் பாடத்திட்ட திருத்தங்கள், கணிப்பீடு மற்றும் மதிப்பீட்டு செயன்முறைகள், அடிப்படை வசதிகள் மேம்பாடு, ஆசிரியர் அதிபர், கல்வி நிர்வாக வெற்றிடங்களைக் குறைத்தல் என்பவற்றில் மாகாண சபைகள் மற்றும் மத்திய அரசுக்கிடையில் சரியான ஒருங்கிணைப்பை மேற்கொள்ளல் அவசியமாகும்.மாகாண சபை மட்டத்தில் காணப்படும் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு அவற்றிற்கு விரைவான தீர்வுகள் வழங்குதல் அவசியமாகும்.தற்போதுள்ள கல்வி முறை மாற்றப்பட வேண்டும் என்பதை நாம் அனைவரும் ஏற்றுக் கொள்கின்றோம். அதற்காக கல்வி சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக தற்போதுள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சியளிப்பதுடன் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அத்துடன் டிஜிட்டல்மயமாக்கலையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post