ஜனாதிபதியின் கையொப்பத்துடன் பல இடங்கள் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பெயரிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானியை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தி மனுத் தாக்கல் செய்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், ஹர்ஷன ராஜகருணா ஆகியோர் இவ்வாறு அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
பொலிஸ் மா அதிபர், பாதுகாப்புச் செயலர், சட்ட மா அதிபர் உள்ளிட்ட 10 பேரை பிரதிவாதிகளாக பெயரிட்டே இந்த மனுவை ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் இருவரும் தாக்கல் செய்துள்ளனர்.
ஜனாதிபதி சட்டத்தரணி பர்மான் காசிம் தலைமையிலான சட்டத்தரணிகளான சந்துன் கமகே, புத்வின் சிறிவர்தன அகையோரை உள்ளடக்கிய குழு இந்த மனுவை மனுதாரர்கள் சார்பில் தாக்கல்ச் செய்துள்ளனர்.


Post a Comment