யாழ். சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு குறைந்த கட்டணத்தில் விமான சேவையை விரைவில் தொடங்க ஃபிட்ஸ் எயார் (Fits Air) நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளதாக அதன் துணைத் தலைவர் பீட்டர் ஹில் தெரிவித்துள்ளார்.
குறைந்த கட்டண விமான நிறுவனமான ஃபிட்ஸ் எயார் (Fits Air) கொழும்பிலிருந்து டுபாய், மாலி மற்றும் திருச்சிக்கு சர்வதேச விமானங்களை ஒக்டோபர் முதல் தொடங்குவதாக அறிவித்துள்ளது. இந்தச் சேவைகளில் ஏ320 – 200ரக விமானங்கள் பயன்படுத்தப்படுமென அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, கடந்த 23பாராளுமன்றத்தில் பேசிய சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துடன் சேவையை நடத்த விரும்பும் இந்தியாவின் விமான நிறுவனங்களுக்கு அரசாங்கம் சலுகைகளை வழங்குகின்றது.
ஆனால், சேவையை வழங்க இந்திய விமான நிறுவனங்கள் தான் ஆர்வம் காட்டவில்லையென்று தெரிவித்திருந்தார். ஃபிட்ஸ் ஏர் (Fits Air) நிறுவனம் விமான சேவையை தொடங்க ஆர்வம் காட்டியுள்ளதையடுத்து, அரசாங்கம் இதற்கான பதிலை இதுவரை வெளியிடவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment