இளம்வயது திருமணம் பாலியல் வன்முறைகள் குறித்த அச்சங்கள் மீண்டும் தலைதூக்குகின்றன…!



15 வயது சிறுமிக்கும் 19வயது இளைஞனிற்கும் இடையில் மொரட்டுவ அங்குலான பகுதியில் திருமணம் ஒன்று இடம்பெறவிருந்தது.

பத்தாம் வகுப்பிற்கு மேல் பாடசாலை கல்வியை தொடராத சிறுமிக்கும் அந்த இளைஞரிற்கும நீண்ட கால காதல் - பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் இடம்பெறவிருந்தது.

குறிப்பிட்ட இளைஞனிற்கும் சிறுமியின் பேரனிற்கும் இடையில் சிறிய வாய்தர்க்கமும் இடம்பெற்றிருந்தது.

பொலிஸார் தலையிட்டு சிறுமியையும் அந்த இளைஞனையும் கைதுசெய்தனர், இளைஞன் பிணையில் கீழ் விடுதலை செய்யப்பட்டான், சிறுமிiயை பொலிஸார் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இலங்கையில் சிறுவயது திருமணங்கள் இடம்பெறுவதை இந்த சம்பவம் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.ஏனையதென்னாசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது இது இலங்கையில் குறைவு என ஐநா அமைப்புகள் தெரிவித்துள்ளன,எனினும் சில சமூகங்கள் மத்தியில் இது அதிகமாக காணப்படுகின்றது.

இந்த விவகாரம் பாலியல் வன்முறை குறித்த பிரச்சினை குறித்தும் கவனத்தை திருப்பியுள்ளது,16 வயதிற்கு உட்பட்ட சிறுமியுடன் அவரது சம்மதம் அல்லது சம்மதமின்றி உறவில் ஈடுபடுவதை சட்டபூர்வ பாலியல் வன்முறை என இலங்கையின் குற்றவியல் சட்டம் தெரிவிக்கின்றது.statutory rape

பொலிஸாரும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும் இலங்கை செஞ்சிலுவை குழுவும் இந்த நிலை குறித்து கவலை வெளியிட்டுள்ளன.

காதல் உறவின் போது இவ்வாறான சட்டபூர்வ பாலியல்வன்முறை மிகவும் பாரதூரமான சமூக பிரச்சினையாக மாறியுள்ளது என பொலிஸ் பேச்சாளர் நிகால் தல்டுவ தெரிவித்துள்ளார்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் குறித்துஅதிக கரிசனையுடன் இருக்கவேண்டும் 16 வயதிற்கு உட்பட் சிறுமிகளுடன் அவர்களின் விருப்பத்துடன் உறவில் ஈடுபடும் சம்பவங்கள் ( இது பாலியல் வன்முறை ) அதிகரித்துள்ளது எனவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவி;த்துள்ளார்.

2021 இல் இவ்வாறானசட்டபூர்வ பாலியல் வன்முறை சம்பவங்கள் 1720 ஆக பதியப்பட்டிருந்தன,இந்த வருடம் இதுவரை 1230 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் குடும்பங்கள் 18 வயதிற்குட்பட்டவர்களிற்கு திருமணம் செய்துவைக்கும் ஆபத்து அதிகமாக காணப்படுகின்றது ஆனால் வறுமைக்கு அப்பாலும் 16 வயதிற்கு உட்பட்டவர்கள் பாதிக்கப்படும் சட்டபூர்வ பாலியல் வன்முறை சம்பவங்கள் இடம்பெறுகின்றன என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.

நெருக்கடிக்கு முந்தைய காலத்திலும் தாய்மார்கள் வெளிநாடுகளிற்கு வேலைகளிற்கு செல்வதால் 16 வயதிற்கு உட்பட்டவர்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்பட்டன என அவர் தெரிவித்துள்ளார்.

இணைய வழிமுறைகள் மூலமும் சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு ஆளாவதும் அதிகரிக்கின்றது கொவிட் காலத்தில் சிறுவர்கள் அதிகளவு இணையத்தை பயன்படுத்தியதும் இதற்கான ஒரு காரணம் என என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.

சிறுவர்களை பெற்றோர் எப்போதும் கண்காணிப்பதில்லை,ஆசிரியர் ஒருவருடன் பிள்ளைகள் இருக்கும்போது பெற்றோர் கண்காணிப்பதி;ல்லை இதன் காரணமாக காதல் போன்றவை ஏற்படுகின்றன எனவும் தெரிவித்துள்ள அவர் இதனை இணையங்கள் சில தவறாக பயன்படுத்துகி;ன்றன.ஆபாச படங்களை பரிமாறுதல் அச்சுறுத்துதல் போன்றவையும் இடம்பெறுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பலர் தொடர்புபட்டிருப்பதால் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகங்கள் குறித்து முறைப்பாடு செய்வதில்லை குற்றங்களில் ஈடுபடுபவர்கள் அனேகமாக நெருங்கிய உறவினர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post