மகன் மீது அசிட் லீசிய தந்தை அம்பலாங்கொடையில் சம்பவம்…!


அம்பலாங்கொடையில் மகன் மீது தந்தையினால் அசிட் வீசப்பட்டதில் மகன் மற்றும் இரண்டு சிறுவர்கள் (பேரன்கள்) காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், அசிட் தாக்குதலுக்கு இலக்கான இரண்டு பேரன்களும் மகனும் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஒரு பேரன் சிறிதளவு அசிட் தாக்குதலுக்கு உள்ளானதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்

அம்பலாங்கொடை பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்கும் தனது இரு பிள்ளைகளை ஏற்றிச் செல்ல குறித்த மகன் வந்த போதே அவரின் தந்தையால் இந்த அசிட் வீச்சு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment

Previous Post Next Post