இலங்கை நிலவரம் குறித்து சர்வதேச நாணயநிதியம் கடும் கவலை...!

  

இலங்கை நிலவரம் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டிருப்பதாக சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணயநிதியத்தின் இலங்கைக்கான முக்கிய அதிகாரிகளான Peter Breuer, Senior Mission Chief for Sri Lanka, and Masahiro Nozaki, ம் இதனை தெரிவித்துள்ளனர்.

இலங்கை நெருக்கடி மக்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நலிவடைந்த நிலையில் உள்ள மக்கள் வறியவர்கள் மீதான தாக்கம் குறித்தே தாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக சர்வதேச நாணயநிதியத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை தங்களின் கொள்கையின் அடிப்படையில் நெருக்கடியான தருணத்தில் இலங்கைக்கு உதவ அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post