சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் அமேசான் ப்ரைம் தளத்தில் கடந்த 2020ம் ஆண்டு வெளியானது சூரரைப் போற்று. அபர்னா பாலமுரளி, கருணாஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்த படம் ஏர் டெக்கான் என்ற சிறிய அளவிலான விமானத்தை உருவாக்கி சாதித்த கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது.
தியேட்டரில் வெளியிட வேண்டும் என்ற காரணத்தால் தொடர்ந்து தள்ளிப்போடப்பட்டு வந்தநிலையில் ஒரு வழியாக ஓடிடி தளத்தில் வெளியானது. இருந்த போதிலும் சூர்யாவின் சூரரைப் போற்று படத்துக்கு ஓடிடியிலும் நல்ல வரவேற்பே பெற்றிருந்தது.
அதற்கு அத்தாட்சியாக இந்தியாவின் 68வது தேசிய விருதுகள் பட்டியலில் சிறந்த திரைப்படமாக சூரரைப் போற்று, சிறந்த நடிகரால சூர்யா, சிறந்த நடிகையாக அபர்னா பாலமுரளி, சிறந்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், சிறந்த திரைக்கதைக்காக சுதா கொங்கரா மற்றும் ஷாலினி ஆகியோர் வென்றிருந்தார்கள்.
இதுபோக பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் சூர்யா தயாரித்து நடித்திருந்த சூரரைப் போற்று படம் திரையிடப்பட்டு பலரது பாராட்டுகளையும் பெற்றிருந்தது. இந்த நிலையில், சினிமா விருதுகளில் முக்கியமான ஒன்றாக கருதப்படும் ஃப்லிம்ஃபேர் விருது விழாவில் எட்டு விருதுகளை சூரரைப் போற்று தட்டிச் சென்றிருக்கிறது.
அதன்படி சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர், இசையமைப்பாளர் என சூர்யா, அபர்னா, சுதா கொங்கரா, ஜி.வி.பிரகாஷ் முறையாக விருதுகளை குவித்ததோடு, சிறந்த துணை நடிகையாக ஊர்வசி, சிறந்த பாடகியாக தீ, சிறந்த பாடகராக கோவிந்த் வசந்தா, கிறிஸ்டின் ஜோஸ், சிறந்த ஒளிப்பதிவாளராக நிகோத் பொம்மி ஆகியோவும் ஃப்லிம் ஃபேர் விருதை அலங்கரித்திருக்கிறார்கள்.
இப்படியாக சூரரைப் போற்று படத்துக்கு விருதுகள் குவிந்திருக்கும் நிலையில், சூர்யாவின் ரசிகர்கள் குஷியாகியிருக்கிறார்கள். இந்த நிலையில் ஃப்லிப் ஃபேர் விருது விழாவில் நடிகர் சூர்யா பேசியிருப்பது குறித்த வீடியோ தற்போது ட்விட்டர் பக்கத்தில் வைரலாகி வருகிறது. அதில், “ரொம்ப கஷ்டப்பட்டு எடுத்த படம் தியேட்டர்ல வரலனு வருத்தப்பட்ட போது, இந்த கொண்டாடினதுக்கு, நேஷ்னல் அவார்ட் வரைக்கும் போக வெச்சதுக்கு நீங்கதான் காரணம். நீங்கதான் சூரரைப்போற்று படத்த எல்லா இடத்துக்கும் கொண்டு போய் சேர்த்தீங்க.That Last Words "Naama Jeichitom Anbaana Fans" 🥺❤️@Suriya_offl Always ❤️❤️❤️#Suriya42 | #VaadiVaasal pic.twitter.com/fPGSsa8SUs
— ᴊɪꜱʜɴᴜ💫 (@jishnu___offl) October 17, 2022
Work hard, belief in yourself, Universe will drives you..! 💯❤️💥@Suriya_offl @Sudha_Kongara @gvprakash @Aparnabala2 @2D_ENTPVTLTD #SooraraiPottru #Suriya42 #filmfare #Suriya #VaadiVassal pic.twitter.com/YgszboiGpu
— Surya Prakash (@ssurya_surya) October 17, 2022
Post a Comment