முன்னோடி சுகாதார சேவைகள் வழங்குநரான நவலோகா மருத்துவமனைக் குழுமம், நோயாளர்களின் நலனையும் மற்றும் நாட்டின் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைத் கருத்தில் கொண்டு அதற்கு நிவாரணம் அளிக்கும் ஒரு முயற்சியாக, வெளி நோயாளர் பிரிவு (OPD), கொழும்பிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் நோயாளிகளை வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கும் வீட்டிற்கு கொண்டு சென்று விடுவதற்கும் இலவச போக்குவரத்து சேவையை அறிமுகப்படுத்துவதாக அண்மையில் அறிவித்துள்ளது.
தற்போது, போக்குவரத்தை மேற்கொள்வதில் ஏற்பட்டுள்ள சவால்கள் மற்றும் நாட்டில் COVID நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பல நோயாளிகள் தங்கள் சுகாதாரத் தேவைகளைப் பெற்றுக் கொள்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில், இந்த முயற்சி மிகவும் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய நோயாளர்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவையை வழங்கவும் நவலோக வைத்தியசாலை குழுமம் செயற்பட்டு வருகின்றது.
“நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், நோயாளிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையால், பலர் மருத்துவரிடம் செல்லவோ, மருத்துவமனைக்கு செல்லவோ விரும்புவதில்லை. ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். நோயாளிகள் தங்களுக்குத் தேவையான சிகிச்சையை சரியான நேரத்தில் பெறுவதை உறுதிசெய்யும் வகையில் இந்தச் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.”
“நோயாளிகளுக்கு எப்போதும் முதலிடம் கொடுக்கும் பொறுப்பான தனியார் சுகாதார சேவை வழங்குநராக, நவலோக மருத்துவமனைகள் குழு இந்த சவாலான சூழ்நிலையை வலிமையுடன் எதிர்கொண்டு நோயாளிகளின் நல்வாழ்வை உறுதிப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆன்லைன் மருத்துவ ஆலோசனைகள் முதல் மருத்துவப் பதிவுகள் விநியோகம் வரை, நாங்கள் எங்கள் பொறுப்பை சரியாக நிறைவேற்றுகிறோம். இந்த இக்கட்டான காலக்கட்டத்தில், எமது மக்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களுடன் சேர்ந்து எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம்.” என நவலோக மருத்துவமனை குழுமத்தின் சந்தைப்படுத்தல் பிரிவின் தலைவர் ரசிக திலகரத்ன தெரிவித்தார்.
தனியார் சுகாதாரத் துறையில் முன்னோடியாக, நவலோக மருத்துவமனைகள் குழுமம் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நோயாளிகளுக்கு உயர்தர மற்றும் மலிவு விலையில் சுகாதார சேவையை வழங்குவதில் முன்னணியில் உள்ளது. நாட்டில் இந்த கடினமான சூழ்நிலையின் ஆரம்பத்திலிருந்து, நோயாளிகளுக்கான சுகாதார சேவைகளைப் பெறுவதற்கான செயல்முறையை எளிதாக்குவதற்கு மருத்துவமனை குழு பல்வேறு திட்டங்களைத் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வீடியோ கோல் அல்லது தொலைபேசி அழைப்புக்கள் மூலம் பல்வேறு நோய்களுக்கு மருத்துவர்களிடம் ஆலோசனை பெறும் வசதியை நோயாளிகள் ஏற்கனவே அனுபவித்து வருகின்றனர். டிஜிட்டல் மற்றும் ஃபிசிக்கல் ஆகிய இரண்டிலும் அவர்களின் சந்திப்புகளை ஆன்லைனில் தேர்வு செய்யவும், பதிவு செய்யவும் மற்றும் பணம் செலுத்தவும் முடியும். MRI “CT” அல்ட்ராசவுண்ட்” இரத்தப் பரிசோதனை அறிக்கைகள் மற்றும் நோயறிதல் அறிக்கைகள் மற்றும் மருந்துச்சீட்டுகள் அவர்களது வீடுகளுக்கே கொண்டுசென்று வழங்கும் வசதிகளும் உள்ளன. வாடிக்கையாளர்கள் தங்கள் மருந்துச் சீட்டுகளைப் பெற QR குறியீட்டைப் பயன்படுத்தக்கூடிய டிஜிட்டல் தளமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் மருத்துவமனை மருந்தகத்தில் தற்போது உள்ள மருந்துகள், மருந்துகளின் விலைகள் மற்றும் மாற்று மருந்துகளை சரிபார்ப்பது சிறந்த சேவைகளும் உள்ளமை விசேட அம்சமாகும்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது, நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை, மேலும் அவர்கள் தேவையான ஆவணங்களை Whatsapp மூலம் பூர்த்தி செய்து குறைந்த நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கலாம். மேலும் நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, நோயாளி மருத்துவமனையில் இருந்து வெளியேறிச் செல்லும் வரை அல்லது போக்குவரத்து வசதி வரும் வரை அவர்களது அன்புக்குரியவர்கள் மருத்துவமனையின் குடும்ப அறையில் தங்குவது ஒரு சிறப்பு சலுகையாகும்.
எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
Post a Comment