உலகக் கிண்ணத்தில் இருந்து விலகுவதாக பாகிஸ்தான் எச்சரிக்கை...!


பாகிஸ்தானில் நடைபெறும் 2023 ஆசிய கிண்ணத்திற்கு இந்தியா தனது அணியை அனுப்பாது என்று அந்நாட்டு அதிகாரிகள் கூறிய நிலையில், இந்தியாவில் நடைபெறும் அடுத்த உலகக் கிண்ணத்தில் இருந்து பாகிஸ்தான் விலகும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை எச்சரித்துள்ளது.

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் உள்ள இந்திய கிரிக்கெட் சபை செயலாளர் ஜெ ஷாஹ், பாகிஸ்தானுக்கு இந்திய அணியை அனுப்ப முடியாது என்றும் மாற்றாக ஆசிய கிண்ணம் பொதுவான இடம் ஒன்றுக்கு மாற்றப்படக் கூடும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கடுமையான பதில் கொடுத்துள்ளது. “இவ்வாறான அறிக்கைகள் ஆசிய மற்றும் சர்வதேச கிரிக்கெட் சமூகத்தை பிளவுபடுத்தும்” என்று அது கூறியுள்ளது.

இது 2023 உலகக் கிண்ணத்திற்காக பாக். அணி இந்தியா செல்வது மற்றும் 2024–2031 இந்தியாவில் நடைபெறும் ஐ.சி.சி போட்டிகளில் தாக்கம் செலுத்தும் என்று பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.

2012 தொடக்கம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தமது சொந்த மைதானத்தில் மற்ற அணியை எதிர்கொண்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post