நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, திலிணி பிரியமாலி மற்றும் அவரது நண்பரும் வர்த்தக பங்காளருமென தெரிவிக்கப்படும் இசுரு பண்டார ஆகிய இருவருக்கும் நவம்பர் 16 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த விசாரணைகளுக்கமைய நேற்றையதினம் (01) CID யினால் கைது செய்யப்பட்ட பொரள்ளே சிறிசுமண தேரருக்கும் எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் (02) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது இவ்வாறு விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment