பேராதனை பல்கலைக்கழகத்தின் இணைந்த சுகாதார விஞ்ஞான கற்கைகள் பீட மாணவரை பகிடிவதைக்கு உட்படுத்தியமை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சமூக வலைத்தளங்கள் மூலம் அழைப்புகளை ஏற்படுத்தி பகிடிவதைக்கு உட்படுத்தியதாக குறித்த மாணவர், பல்கலைக்கழக இணையத்தளத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக ஒழுக்காற்றுப் பிரிவு அதிகாரியினால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மாணவர் இணைய வழியாக கல்வி கற்கும் நிலையில், சமூக வலைத்தளங்கள் ஊடாக அழைப்புகளை மேற்கொண்டு தம்மை பகிடிவதைக்கு உட்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பான குரல் பதிவு மற்றும் காணொளிகளை ஒழுக்காற்றுப் பிரிவு அதிகாரி பொலிஸாருக்கு ஒப்படைத்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Post a Comment