விக்டோரியா நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு...!


மத்திய மலைநாட்டில் நிலவிவரும் கடும் மழையுடனான வானிலை காரணமாக விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வான் மட்டத்தை அடைந்துள்ளதால் அதன் 8 வான் கதவுகளில் 6 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று பிற்பகல் 7.00 மணியளவில் வான் கதவுகள் திறக்கப்பட்டதாக விக்டோரியா நீர்த்தேக்கத்தின் தலைமை பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

இதனால், குறித்த நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்கள் அவதானமாக செயற்படுமாறு கோரப்படுகின்றது.

Post a Comment

Previous Post Next Post