வடக்கில் களமிறக்கப்பட்டுள்ள பொலிஸாரின் மோப்ப நாய்கள்…!


வடக்கில் போதைப் பொருள் பாவனை மற்றும் விநியோகம் என்பவற்றை கட்டுப்படுத்தும் நோக்குடன் வவுனியா, நெளுக்குளம் பொலிஸார் மோப்ப நாயின் துணையுடன் விசேட சோதனை நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

வவுனியா, நெளுக்குளம் சந்திப் பகுதியில் நேற்று (04) காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அண்மைக்காலமாக வடக்கில் போதைப் பொருள் பாவனை மற்றும் பரிமாற்றம் என்பன அதிகரித்துள்ளதுடன், வவுனியாவிலும் போதைப் பாவனை அதிகரித்துள்ளது.

இதை கட்டுப்படுத்தும் வகையில் நெளுக்குளம் பொலிசார் மோப்ப நாயின் துணையுடன் வீதியில் சென்ற பேரூந்துகள், சொகுசு வாகனங்கள்ட என்பவற்றை மறித்து சோதனையிட்டதுடன், சந்தேகத்திற்கிடமான இடங்கள் மற்றும் நபர்களையும் சோதனையிட்டனர்.

Post a Comment

Previous Post Next Post