இலங்கைக்கு கிடைக்கவுள்ள பல தொழில் வாய்ப்புகள்: வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்...!



சவூதி அரேபியாவில் நிர்மாணத்துறையுடன் தொடர்புடைய பல தொழில் வாய்ப்புகள் இலங்கைகைக்கு கிடைக்கவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியாவில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் பணிகளுக்காக செல்ல விரும்புவோர், அதற்கு முன்னர் பொறியியல் சபையில் தம்மை பதிவு செய்வது கட்டாயம் என்று சவூதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, குறித்த துறைகளில் தொழில்களுக்குச் செல்ல விரும்புபவர்கள் உரிய பதிவு சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமென இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியாவில் ஆரம்பிக்கப்படவுள்ள நிர்மாணத் திட்டங்களுக்கான தொழில் வாய்ப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார சவூதி அரேபியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post