கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க சிட்னியில் கைது…!


அவுஸ்திரேலியாவில் நேற்று கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க, மீது பாலியல் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனுஷ்க குணதிலக்க, அனுமதியின்றி தன்னுடன் உடலுறவு கொண்டதாக பெண் ஒருவரால் நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

டேட்டிங் செயலி மூலம் தனுஷ்க குணதிலக்கவை சந்தித்த 29 வயது பெண், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தச் சம்பவம் இந்த வார தொடக்கத்தில் சிட்னியில் உள்ள வீடொன்றில் நடந்ததுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது தனுஷ்க நேற்று இரவு இலங்கை அணி தங்கியிருந்த விருந்தகத்தில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில் அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post