மஹிந்த, கோட்டாபய ராஜபக்ஷ கனடாவுக்குள் நுழையத் தடை...

 


இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக மறுத்து வருகின்ற நிலையில், ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட யுத்தத்தில் ஈடுபட்ட தரப்பினர் மீது சர்வதேச சமூகம் குற்றச்சாட்டுக்களை தொடர்ந்தும் முன்வைத்து வருகின்றது.

இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதிகளும், சகோதரர்களுமான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய உள்ளிட்ட நால்வருக்கு தமது நாட்டிற்குள் பிரவேசிக்க கனடா தடை விதித்துள்ளது.

கனடா அரசாங்கத்தின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் இந்த விடயத்தை , அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு மேலதிகமாக பணியாளர் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க மற்றும் லெப்டினன் கமான்டர் சந்தன பிரசாத் ஹெட்டிஆராய்ச்சி ஆகியோருக்கும் கனடா அரசாங்கம் தடை விதித்துள்ளது.
Courtesy: BBC Tamil

Post a Comment

Previous Post Next Post