இன்று (02) நள்ளிரவு முதல் உணவுகளின் விலை அதிகரிப்பு...!



உணவகங்களில் உணவுகளின் விலை இன்று (02) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை உணவக மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைக் குறிப்பிட்டார்.

உணவுப் பொருட்களின் உற்பத்திச் செலவு அதிகரிப்பு காரணமாக அனைத்து உணவுகளின் விலைகளையும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், தேனீர் ஒன்றின் விலை 5 ரூபாவினாலும், பால் தேனீர் ஒன்றின் விலை 10 ரூபாவினாலும், சாப்பாடு (Rice and curry) ஒன்றின் விலை 25 ரூபாவினாலும், பிரைட் ரைஸ் மற்றும் கொத்து விலையை 50 ரூபாவினாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நன்றி...
Daily-Ceylon

Post a Comment

Previous Post Next Post