ஐ.அ. இராச்சியத்தில் மீண்டும் கனத்த மழை...!


ஐக்கிய அரபு இராச்சியத்தில் மீண்டும் கனத்த மழை பெய்ய ஆரம்பித்திருக்கும் நிலையில் பல இடங்களில் பாடசாலைகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.

நேற்றுக் காலை 8 மணிக்கு முன்னதாக சில வட்டாரங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பொழிந்ததாக தேசிய வானிலை ஆய்வகம் கூறியது. நேற்று முன்தினம் இடி மின்னலுடன் பெருங்காற்று வீசியது.

டுபாயின் சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான டுபாய் விமான நிலையத்தில் 13 விமானங்கள் ரத்துச் செய்யப்பட்டன. 5 விமானச் சேவைகள் இடம் மாற்றிவிடப்பட்டதாக பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். டுபாய் விமான நிலையமும் சீரற்ற வானிலை தொடர்பாக பயணிகளுக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளது. பயணிகள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே ஆரம்பிக்குமாறும், அவர்கள் காரிலோ அல்லது பொதுப் போக்குவரத்திலோ பயணித்தாலும் சரியான நேரத்தில் விமான நிலையத்தை அடைய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

பாடசாலைகள் வீட்டிலிருந்து பயிலும் நடைமுறைக்கு மாறின. அரச துறை அலுவலகங்கள் மூடப்பட்டன.

இருப்பினும் அது இரு வாரங்களுக்கு முன் பெய்த மழை அளவு மோசமில்லை என்று கூறப்பட்டது.

இரு வாரங்களுக்கு முன் ஐக்கிய அரபு இராச்சியத்தின் பல பகுதிகளைக் கடும் மழையும் வெள்ளமும் புரட்டிப்போட்டன.

சில இடங்களில் இதுவரை காணாத மழைப்பொழிவு பதிவானது. 2,000 விமானச் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டன. 295.5 மில்லிமீற்றர் மழை பதிவானது. வெள்ளத்தில் சிக்கி நால்வர் உயிரிழந்தனர். பருவநிலை மாற்றம் அதற்கு முக்கியக் காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post