தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை...!


செப்டெம்பர் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 20ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, அனைத்து பாடசாலைகளும் வழமை போன்று எதிர்வரும் 24 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும்.

இந்நிலையில், வாக்கெடுப்பு நிலையங்களாக பயன்படுத்தப்படவுள்ள பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் 18 ஆம் திகதி பாடசாலை முடிவடையும் நேரத்திற்கு பின்னர் கிராம அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post