விசேட போக்குவரத்து...!



நீண்ட வார இறுதி விடுமுறைக்காக சொந்த இடங்களுக்கு செல்வோருக்காக இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய மேலதிகமாக சுமார் 60 பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

நேர அட்டவணையின்றி மேலதிக பஸ் சேவைகளை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கூறியுள்ளது.

இதனிடையே இன்றிரவு மற்றும் நாளைய தினங்களில் பதுளையிலிருந்து கொழும்பு வரை விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post