வீட்டை வாடகைக்கு கொடுத்தவர் படுகொலை…!


கம்பஹாவில் வீட்டின் உரிமையாளரான பெண் ஒருவர் கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெலிவேரிய பிரதேசத்தில் வாடகைக்கு வீடு வழங்கும் வீட்டின் உரிமையாளரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

படுகொலையின் பின்னர் 8 லட்சம் ரூபாய் பணமும் 18 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் வெலிவேரிய, அம்பறலுவ தெற்கு பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய மங்கலிகா என்ற பெண் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணின் வீட்டின் அறையில் தங்கியிருந்த தம்பதியே இந்தக் கொலையை செய்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

குறித்த பெண் வீட்டில் இருந்த போது, போர்வையால் மூடி மூச்சு விட முடியாதவாறு அழுத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண் அணிந்திருந்த தங்க நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றுடன் குறித்த தம்பதியினர் தப்பி செல்ல முயற்சித்துள்ளனர்.

எனினும் குறித்த வீட்டில் மற்றுமொரு வாடகை அறையில் தங்கியிருந்த தம்பதி, கொள்ளையுடன் தொடர்புடைய ஆண் நபரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தப்பியோடிய பெண்ணை கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, வாடகைக்கு தங்குமிடங்களை வழங்கும் போது அந்த நபர்கள் தொடர்பில் உரிய முறையில் விசாரணை செய்யுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post