இலங்கையில் - கடந்த 3 வருடத்திற்குள் குடும்பத் தகராறுகள், மற்றும் கனவன் - மனைவிக்கிடையே ஏற்படும் தகராறுகள் Dometistic vioilence அல்லது காதலனால் கொலை, , கள்ள காதலர் தொடர்பு அலுவலகங்களில் ஏற்படும் தகராறுகள் sexual violences போன்ற பல்வேறுபட்ட தகராறுகள் காரணமாக 22 -22 -.24 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையிலான காலப்பகுதியில் இதுவரை 350 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை பொலிஸ் புள்ளிவிபர அறிக்கையின்படி பெண்களுக்கான வன்முறைகள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே செல்கிறது.
இவ்விடயமாக இலங்கை பெண் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரேனுகா ஜெயசுந்தர அவர்கள் தகவல் தருகையில்.
2021 ஆம் ஆண்டு 95 பெண்கள் மரணம், 2022 ஆம் ஆண்டு 105 பெண்களும் 2023 ஆண்டு 71 பெண்கள் இவ் ஆண்டு ,2024 அண்மைக்காலம் வரை 85 பெண்கள் மரணமாகியுள்ளார். மொத்தமாக 350க்கும் மேற்பட்ட பெண்கள் இலங்கையில் மரணமாகியுள்ளார்.
இதுவரை ஒர் இலட்சத்து முப்பதாயிரம் குடும்பத்தகாராறுகள் பதியப்பட்டுள்ளன இவைகள் வன்முறைகள் கனவன்-மனைவி தகராறுகள் .தொழில் செய்யும் இடத்தில் ஏற்படும் காரணமாக பெண்கள் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை பதிந்துள்ளனர் . இதனால் அனேகமான பெண்கள் தமது உயிர் பாதுகாப்புக்காக பொலிஸ் நிலையங்களில் பாதுகாப்பு வேண்டியும் முறையிடுகின்றனர் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
(அஷ்ரப் ஏ சமத்)
Post a Comment