காத்தான்குடி பிரதேசம் முழுவதும் பாரிய டெங்கு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கமைய கடந்த ஒரு வார காலத்தில் சுமார் 5000 வீடுகள் டெங்கு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட இடங்களில் டெங்கு குடம்பிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் 100 க்கும் மேற்பட்ட இடங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் நான்கு பேர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
பொது சுகாதார பரிசோதகர்கள் நகர சபை ஊழியர்கள் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஊழியர்கள் இணைந்து பாரிய டெங்கு ஒழிப்பு பணியினை காத்தான்குடி பகுதியில் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment