பாராளுமன்ற தேர்தலில் பல ராஜபக்ஷேக்கலின் நிலமை…!


பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ ஆகியோர் போட்டியிடவோ, தேசியப்பட்டியலில் இடம்பெறவோ மாட்டார்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட நாமல் ராஜபக்ஷ தேர்தலில் நேரடியாக போட்டியிடாமல் அவரது பெயர் தேசியப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

எனினும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சசீந்திர ராஜபக்ஷ மொனராகலை மாவட்டத்திலும், நிபுண ரணவக்க மாத்தறை மாவட்டத்திலும் போட்டியிடவுள்ளதாக அக்கட்சி மேலும் தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post