இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைத் திருத்தம் - மண்ணெண்ணெய் விலை மட்டும் குறைந்தது...!



இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய புதிய விலை ரூ. 183 ஆகவும் ஏனைய எரிபொருட்களின் விலையில் மாற்றமில்லை எனவும் இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
 
கடந்த நவம்பர் மாதம் 30 நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதனடிப்படையில் டீசலின் விலை 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டதுடன் அதன் புதிய விலை 286 ரூபாவாகும். 311 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 பெட்ரோல் லீற்றரின் விலை 2 ரூபாவினால் குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post