News Alert: Youtube தவிர மற்ற சமூக ஊடக கணக்குகள் மீண்டும் கட்டுப்பாட்டில் - பொலிஸ் ஊடகப் பிரிவு...! (Video)



இலங்கை காவல்துறையின் youtube சேனல் உட்பட பல உத்தியோகபூர்வ சமூக ஊடக கணக்குகள் மீதான சைபர் தாக்குதல் தொடர்பான சமீபத்திய நிலைமை குறித்து பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கை காவல்துறையின் உத்தியோகபூர்வ Facebook, TikTok, Instagram, YouTube மற்றும் x கணக்குகள் கடந்த 30ஆம் திகதி அன்று மாலை சைபர் தாக்குதலுக்கு உள்ளானது.

உத்தியோகபூர்வ Facebook, TikTok, Instagram மற்றும் x கணக்குகள் தற்போது மீண்டும் இலங்கை காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவின் அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொலிஸ் யூடியூப் சேனல் இன்னும் இலங்கை காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை.

தகவல் தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள் அதை மீண்டும் கட்டுப்பாட்டில் கொண்டும்வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த இணையத் தாக்குதல் தொடர்பில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
    

Thanks:
Sri Lanka Police - Official Facebook-

Post a Comment

Previous Post Next Post