
பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தலைமையில் விசேட செய்தியாளர் மாநாடு ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது
அதன்படி எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் உயர்தர பரீட்சை பெறுபேறுகளை வௌியிட எதிர்ப்பார்த்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
மேலும் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு இடையில் பல கட்டங்களாக மதிப்பீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை பெற்றுக் கொடுக்க சுமார் 4 மாதக்காலங்கள் தேவைப்படுகிறது.
அதனை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றும் ஏப்ரல் மாதத்திற்குள் பெறுபேறுகளை வௌியிட முடியும் என நினைகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment