சென்னை மெட்ரோவிற்கு ரூ.43,000 கோடி வாங்கி கொடுத்துள்ளோம்- அண்ணாமலை...!



கோவிலுக்கு செல்லக்கூடிய எண்ணிக்கை அதிகரித்துள்ளது உண்டியல் வசூல் அதிகரித்து இருக்கக்கூடிய நிலையில், அடிப்படை வசதிகள் இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி இந்தியாவில் அவருடைய துறையில் பெரிய நிபுணர். அவருக்கு அவர் சார்ந்து இருக்கக்கூடிய மதத்தின் மீது பற்று இருக்கிறது, அதில் தவறு கிடையாது. மார்கழி மாதத்தில் பாராயணம் பாடுவது தவறு கிடையாது, பசுமாட்டின் மீது நம்பிக்கை இருக்கிறது தவறு கிடையாது, அது அவருடைய கோட்பாடு. இதனை வகுப்பறையில் மாணவர்களிடம் அவர் சொல்வது கிடையாது. அவருடைய தனிப்பட்ட நிலைப்பாடு, அதை குறை கூறக்கூடாது. 

ஒரு கருத்தை மட்டும் பிரதானப்படுத்தி அதை அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் அவரைப் பற்றி தெரியும், அவருடைய சாதனையை தெரியும். காமகோடி ஏஐ தொழில்நுட்பத்தில் சிறந்த பேராசிரியராக இருந்து வருகிறார். 2026 எத்தனை அமாவாசை இருக்கின்றது? என்று கணக்கு செய்து கொள்ளுங்கள். எத்தனை பௌர்ணமி இருக்கிறது என்பதை எண்ணிக் கொள்ளுங்கள். அதற்குப் பிறகு இந்த ஆட்சி இருக்காது என தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post